முத்துநாயக்கன்பட்டியில் உயர்மின்கோபுர விளக்கு அமைக்க பூமிபூஜை
முத்துநாயக்கன்பட்டியில் உயர்மின் கோபுர விளக்கு அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் காடாம்பட்டி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திடலில் மின் விளக்கு இல்லாததால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து பக்தர்கள் அங்கு உயர்மின் கோபுர விளக்கு அமைத்து கொடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் எம்பி நிதியிலிருந்து சுமார் 8லட்சம் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர விளக்கு அமைப்புக்கான பூமிபூஜை விழா நடைபெற்றது. இதில் சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அருள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.