தேனி : இருசக்கர வாகனம் திருட்டு
டாஸ்மார்க் கடை அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-28 08:21 GMT
இருசக்கர வாகனம் திருட்டு
அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த 20ஆம் தேதி பொம்மையாகவுண்டம்பட்டி டாஸ்மார்க் கடை அருகே நிறுத்திவிட்டு சில்லரை மாற்றுவதற்காக சென்று இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய இருசக்கர வாகனம் மாயமாக இருந்தது நேற்று வரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அல்லிநகரம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இது குறித்து அல்லிநகரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.