நண்பருடன் சென்ற செவிலியர் பரிதாப மரணம்

நண்பருடன் பைக்கில் சென்ற செவிலியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-05-28 14:13 GMT

கோப்பு படம்

 திருச்சி மாவட்டம், மணப் பாறை கரிக்கான் குளத் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் பிரியதர்ஷினி வயது - 23 இவரது நண்பர் பெரம்பலூர் மாவட்டம், எறைய சமுத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவியின் மகன் மணி கண்டன் (23). இவர்கள் 2 பேரும் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பயிற்சி செவிலியராக பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் மே - 26ம் தேதி பிரியதர்ஷினியை திருச்சியில் இருந்து மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் பெரம்பலூருக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் பெருமாள் மலை எதிரே வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து பிரியதர்ஷினி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

Advertisement

இதில் படுகாயமடைந்த பிரியதர்ஷினியை அந்த வழி யாக சென்றவர்கள் உதவியுடன் சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டிருந்த பிரியதர் ஷினிசிகிச்சை பெற்று வந்த நிலையில் மே - 27ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News