கடவூர் அருகே விபத்து

முதியவர் ஓட்டிய டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

Update: 2024-05-07 17:40 GMT

கோப்பு படம்

கரூர் மாவட்டம்,கடவூர் தாலுகா, மயிலம்பட்டி, கிழக்கு தெருவை சேர்ந்தவர் அபூபக்கர் (70). இவர் நேற்று  மதியம் ஒரு மணி அளவில், ஜெகதாபியில் இருந்து வெள்ளியணை செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள கிழக்கு மேட்டுப்புதூர் அருகே சென்றபோது வேகமாக சென்றதால், டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அபுபக்கருக்கு தலை, வலது கை, வலது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அறிந்த அபுபக்கரின் மகன் ஜாஃபர் அலி வயது 35 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை ஓட்டி விபத்து ஏற்பட காரணமான அபுபக்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News