கரூர் அருகே விபத்து - 2 பெண்கள் படுகாயம்

பெண் ஓட்டிய டூவீலர் மீது மற்றொரு டூவீலர் மோதி விபத்து. இரு பெண்கள் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.;

Update: 2024-05-07 18:28 GMT

கோப்பு படம்

 கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி சுகன்யா வயது 30. அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மனைவி ராஜம்மாள் வயது 55. இவர்கள் இருவரும் மே 5-ம் தேதி காலை 11:30 மணி அளவில், இவர்களுக்கு சொந்தமான எலக்ட்ரிக் டூவீலரில் சுக்காலியூரிலிருந்து மாயனூர் செல்லும் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

இவர்களது வாகனம் பி.வெள்ளாளப்பட்டி அருகே உள்ள சீதப்பட்டி காலனி பாலம் அருகே சென்றபோது, அதே சாலையில் வேகமாக வந்த TN 99 AA8247 என்ற எண் கொண்ட பஜாஜ் பல்சர் டூ வீலர், சுகன்யா ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில், சுகன்யா மற்றும் ராஜம்மாள் ஆகிய இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டது.

Advertisement

உடனடியாக இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சுகன்யாவின் சகோதரி சுதா (28) என்பவர், அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய டூவீலர் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News