பைக் மோதி ஒருவர் பலி
புதுக்கோட்டை பகுதியில் நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-06-02 12:41 GMT
பலி
புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜராஜபாண்டியன் வயது 40 இவர் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை அரிமளம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர் மீது பைக் மோதியது. இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கணேசன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.