குமாரபாளையம் அருகே பைக்குகள் மோதல்: மூன்று பேர் படுகாயம்

குமாரபாளையம் அருகே இரண்டு பைக்குகள் மீது கல்லூரி மாணவி ஓட்டிவந்து மோதிய பைக்கால் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.;

Update: 2024-04-15 15:02 GMT
குமாரபாளையம் அருகே பைக்குகள் மோதல்:  மூன்று பேர் படுகாயம்

விசாரணை நடத்தும் போலீசார் 

  • whatsapp icon

. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியை சேர்ந்த சூசையப்பன், 59, வெல்டர். டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் நேற்றுமுன்தினம் இரவு 07:30 மணியளவில் இடைப்பாடி சாலை, பாறையூர் அருகே சென்று கொண்டிருந்தார்.

இவருக்கு பின்னால் வந்த பெண் சுசுகி அக்செஸ் டூவீலர் ஓட்டுனர், சூசையப்பன் சென்ற வாகனம் மீது மோதியதுடன், அவருக்கு முன்னால் சென்ற மற்றொரு ஹீரோ ஸ்பெலேண்டர் டூவீலர் மீது மோதினார். அதில் சென்ற விவசாயி, விஜயகுமார், 37, சூசையப்பன், 59, இருவரும் பலத்த காயமடைந்தனர்.

போலீசார் விசாரணையில் விபத்துக்கு காரணமான பெண் ஓட்டுனர் பெயர் கிருத்திகா, 21, என்பதும், ஈரோடு தனியார் கல்லூரியில் எம்.காம். மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. விபத்தில் கிருத்திகாவும் காயமடைந்ததால்,

இவர் பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சூசையப்பன் கோவை தனியார் மருத்துவமனையிலும், விஜயகுமார் குமாரபாளையம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குபதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News