உரிய ஆவணமின்றி வந்ததால் பைக் பறிமுதல் - தீக்குளிக்க முயற்சித்த வாலிபர்

ஜெயங்கொண்டம் அருகே வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி வந்த வாலிபரின் வாகனம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதால் போலீசாரை கண்டித்து ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் வாலிபர் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2024-06-02 13:16 GMT
மணிகண்டன்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சின்னவளையம் பைபாஸ் பாலத்தின் கீழ் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவரிடம் வாகனத்தை பிடித்து ஆவணங்களை கேட்டுள்ளனர் அப்போது அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லை. இதனால் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் ஜெயங்கொண்டம் நால்ரோடு பகுதிக்கு வந்து பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு திடீரென தீக்குளிக்க முயற்சித்தார் அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கி உள்ளனர் இதையடுத்து போலீசார் அவரை போலீஸில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

விசாரனையில் அவர் பூவானிப்பட்டு கிராமம் சிறுவடித் தெருவைச்  சேர்ந்த  கொளஞ்சி மகன் மணிகண்டன் (30) என்பதும் இவர் குடிபோதையில் இருந்ததும் விசாரனையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News