வாணியம்பாடி அருகே பைக் திருட்டு
வாணியம்பாடி அருகே விலாசம் கேட்பது போல் நாடகமாடி இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-11 14:47 GMT
கோப்பு படம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டெரி பகுதியை சேர்ந்த பிரவின் இவர் பெங்களூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் நேற்று விடுமுறை என்பதால் இவரது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அப்பொழுது செட்டியப்பனூர் கூட்ரோடு அருகே வரும்பொழுது இரு மர்ம நபர்கள் பிரவின் இடம் விலாசம் கேட்பது போல் நாடமாடி அவரை கீழே தள்ளிவிட்டு கண் இமைக்கிற நேரத்தில்இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருடி தப்பி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பிரவின் வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் முகவரி கேட்பது போல் நாடக மாடி செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை திருடி சென்றதை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது