தஞ்சாவூரில் பறவைகள் நிழற்பட காட்சி

தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2024-02-10 15:17 GMT
பறவைகள் நிழற்பட கண்காட்சி

மனிதர்களின் நலவாழ்வை உறுதிப்படுத்துவோம் என்னும் நோக்கத்தில் உலக அளவில் கொண்டாடப்பட்டு வரும், உலக ஈர நில தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில், அறிவியல் கழகம் மற்றும் வனத் துறையின் சார்பில் பறவைகள் நிழற்படக் காட்சி நடைபெற்றது. 

பறவைகள் படக் கண்காட்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஜான் பீட்டர் திறந்து வைத்தார். துறைத் தலைவர் முனைவர். சந்திரகலா, முனைவர் தங்கமதி முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாவட்ட வன அலுவலர்  செல்வம், வனத்துறை சரக அலுவலர் ரஞ்சித், வனச் சரகர் தி.இளஞ்செழியன், ஈவெட் ட்ரஸ்ட் சதீஷ்,  ஜாஃபர், சத்யா, கல்லூரி ஆசிரியர் கழக செயலாளர் பேரசிரியர் பெரியநாயகி ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டு பாராட்டினர்.  அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுகுமாரன்,

கல்லூரி பேராசிரியர்கள் ராதா, மணிவண்ணன், வாசுகி, நாசர், கவிதா, ரெக்சி, கீதாலெட்சுமி, மாணவர் பேரவைத் தலைவி உள்ளிட்டவர்கள் மாணவர்களின் திறமைகளை பாராட்டினர்  மாணவிகள் பொ.பார்வதி, ஆர்த்தி, அ.அட்சயா, க.அஷ்டலட்சுமி, து.சிந்துஜா, ரா.பொற்செல்வி, 

வ.பிருந்தா, சி.சிவப்பிரியா, அபிநயா உள்ளிட்ட மாணவிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 200 மாணவர்கள் நிழற்பட கண்காட்சியில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News