பறவை இனங்கள் அதிகரிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பறவை இனங்கள் அதிகரித்துள்ளது.

Update: 2023-10-29 08:27 GMT

பறவைகள் அதிகரிப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத பறவை கூட்டம் அதிகமாக காணப்படுகிறது மயிலாடுதுறை மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயமும் மீன்பிடிப்பதும் ஆகும். இம்மாவட்டத்தில் தண்ணீர் வறட்சி என்பதே பெரும்பாலும் காணப்படாத ஒன்று. கோடை காலங்களில் மட்டும் குளம் குட்டை ஆறுகள் வற்றி இருக்கும். ஆனால் கொள்ளிடம் ஆற்றில் மட்டும் ஆங்காங்கே தண்ணீர் காணப்படுவது வாடிக்கை. மேலும் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரைபகுதி, வங்க கடற்கரை ஓரம் ,ஆற்றங்கரையோரப் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் லட்சக்கணக்கான மரங்கள் உள்ளன. பறவைகளுக்கு பாதுகாப்பாக இம்மரங்க உள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலும் இரண்டு போகம் விவசாயம் நடைபெற்று வருவதால் பறவை இனங்களுக்கு இறை தேடுவது எளிதாக உள்ளது. நெல்,நண்டு, நத்தை, மீன், புழுபூச்சிகள் எளிதாக கிடைப்பதால் மாவட்டத்தில் கொக்கு, மடையான், கவுதாரி புறா, மயில் மற்றும் கோடியக்கரைக்கு வருகை தரும் வெளிநாட்டு பறவைகளும் இம்மாவட்டத்தை நாடி வருகின்றன. முன்பெல்லாம் பலர் பறவை வேட்டையாடி வந்த நிலையில் பறவைகளின் கூட்டம் வருவது குறைந்திருந்தது. தற்போது துப்பாக்கியால் பறவையை சுடுவது ஓரளவுக்கு குறைந்துள்ளது இதனால் இந்த ஆண்டு பறவைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. பறவை இனங்கள் வந்து செல்ல பாதுகாப்பாக இருப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட அதிகாரிகள் பறவை சுடுவதற்கான உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News