மார்கழி மாத பிறப்பு - சிவன் கோவிலில் பூஜை நேரங்கள் மாற்றம்

Update: 2023-12-17 06:49 GMT

அருள்மிகு ஸ்ரீ அன்னை பாகம் பிரியாள் உடனுறை அருள்மிகு சங்கர ராமேஸ்வரர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி சிவன் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது "தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அன்னை பாகம் பிரியாள் உடனுறை அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோயிலில் நாளை 17ஆம் தேதி முதல் மார்கழி மாதம் பிறப்பு முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது இதன்படி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு திருவனந்தல் திருப்பள்ளி எழுச்சி பின்பு அலங்கார தீபாரணை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை, 10 மணிக்கு உச்சிக்கால பூஜைக்கு பின் கோவில் நடை அடைக்கப்படும். மாலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் இரவு 8மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News