மின்சாரம் தாக்கி பிரியாணி கடை உரிமையாளர் பலி !
மின்சாரம் தாக்கி பிரியாணி கடை உரிமையாளர் பலி - போலிசார் விசாரணை;
By : King 24x7 Angel
Update: 2024-03-27 06:28 GMT
பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கல்லூரி சாலை மாரிசெட்டிகு ளம், ஸ்கடர் நகரை சேர்ந்தவர் அருள்முரு கன் (வயது 47). பிரியாணி கடை உரிமையாளரான இவர் நேற்று மாலை குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள ஹீட்டரை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அருள்முருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.