சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி பிரச்சாரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2024-04-06 11:17 GMT

பிரச்சாரம் 

நான் வெற்றி பெற்றால் இதே தொகுதியில் எனது குடும்பத்துடன் வந்து தங்கி வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி பிரச்சாரம் .......

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வேப்பூர் வட்டாரப் பகுதிகளான மருவத்தூர், பேரளி, சித்தளி குன்னம், வரகூர், பறவாய் மற்றும் எழுமூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

அப்போது  வாக்காளர்களிடையே பேசிய கார்த்தியாயினி, தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு திருமாவளவன் நன்றி சொல்ல கூட தொகுதி பக்கம் வரவில்லை தற்பொழுது வந்து கொண்டிருக்கிறார் ஓட்டு கேட்டு, வெற்றி பெற்றுவிட்டால் மீண்டும் வர மாட்டார். மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி தான் வரப்போகிறது எனவே நான் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதால் வெற்றி பெற்றவுடன் பிரதமர் அவர்களிடம் நேரடியாக சென்று நமது தொகுதி மக்களுக்கான அனைத்து விதமான நலத்திட்டங்களையும் கேட்டு பெறமுடியும், ஆனால் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாத இந்தியா கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் எந்த நலத்திட்டங்களையும் கேட்டு பெற முடியாது.

எனக்கு ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்தால் எனது குடும்பத்துடன் இதே தொகுதியில் வந்து தங்கி விடுவேன், என் குழந்தைகளை இங்குள்ள பள்ளியிலேயே படிக்க வைப்பேன் எனது வாக்குறுதிகளை நான் நிறைவேற்ற விட்டால், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைக்காவிட்டால், உங்கள் தொகுதியில் தங்கி உள்ள என்னை நேரில் வந்து கேள்வி கேட்கலாம். எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் சார்பில் பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தை போட்டியிடும் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.

பிரச்சாரத்தில் கூட்டணி கட்சிகளான பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News