பாஜக வேட்பாளர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல். பாரதிய ஜனதா வேட்பாளர் வி.எஸ் நந்தினி வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-27 16:36 GMT

வேட்புமனு தாக்கல்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயராணி ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் இந்த தொகுதியில் ஏற்கனவே அதிமுக சார்பில் ராணி நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி சுயேட்சை வேட்பாளர் மோகன் குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் இந்த நிலையில் பாரதி ஜனதா வேட்பாளர் அறிவிக்கப்பட்ட வி எஸ் நந்தினி இன்று பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் குழித்துறை தபால் நிலையம் சந்திப்பில் இருந்து தாலுகா அலுவலகம் வரை ஊர்வவமாக வந்து விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் தேர்தல் அதிகாரி சங்கரலிங்கத்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
Tags:    

Similar News