பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.

உண்ணாமலைகடை,வன்னியூர் உட்பட தொகுதியின் பல்வேறு இடங்களில் ஆதரவாளர்களுடன் பாஜக வேட்பாளர் நந்தினி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

Update: 2024-04-07 13:16 GMT

வாக்கு சேகரிப்பு

விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் நந்தினி கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் கூட் டணி கட்சியின் முக்கிய நபர்கள், சமுதாய தலை வர்கள் என முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுவதுடன் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்தும் வாக்கு சேகரித்து வருகிறார்.இன்று நந்தினி உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இதைத் தொடர்ந்து வன்னியூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார். பின்னர் கடையால் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட கடையால் மேலேமுக்கு பகுதியில் இருந்து துவங்கி கடையால், களியல் பகுதிகளில் கடை வீதிகள், வீடுகளில் மக்களை சந் தித்து வாக்கு சேகரித்தார்.
Tags:    

Similar News