பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி. ராமலிங்கம் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது வரும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. இராமலிங்கம் போட்டியிடுகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவூர், செட்டிபட்டி , வீராச்சிப்பாளையம், வடுகப்பட்டி, ஆனைக்கல்பாளையம், ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் கிராமம்,கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .
அப்போது பேசிய அவர் இப்பகுதியின் வட்டார வளர்ச்சிக்கு விவசாய விளைபொருள் ஏற்றுமதி மையத்தை கொண்டு வந்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்று பொது மக்களுக்கு வாக்குறுதி அளித்து தாமரைச் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாமக, அமமுக, தமாக, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் உடனிந்தனர்.