பொள்ளாச்சியில் பாஜகவினர் தேர்தல் வாக்குறுதி கோரிக்கை பெட்டி அறிமுகம்

பொள்ளாச்சியில் பாஜக சார்பில் பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதி கோரிக்கை பெட்டி அறிமுகம் செய்தனர்.

Update: 2024-03-10 18:30 GMT

பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சியில் பொதுமக்களிடமிருந்து வாக்குகளை பெறுவதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை பெறுவதற்கு தேர்தல் வாக்குறுதி கோரிக்கை பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக சார்பில் உங்கள் விருப்பம் எங்கள் உத்தரவாதம், மீண்டும் மோடி வேண்டும் மோடி என அச்சிடப்பட்ட பெட்டி தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதி கோரிக்கை பெட்டி அறிமுக நிகழ்வு பொள்ளாச்சியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது, இதில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் பாஜகவினர் முன்னிலையில் பெட்டியை அறிமுகப்படுத்தினார்.

இது குறித்து மாவட்ட தலைவர் வசந்தராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது., இந்த பெட்டி 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வைக்கப்பட்டு பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை மனுக்களை பெறப்பட்டு இதை பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக தயார் செய்யப்பட்டு அந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும், கடந்த காலத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் உங்கள் ஸ்டாலின் என்ற நிகழ்வுகள் மூலம் பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் என்ற தலைப்பில் புகார் பெட்டி வைத்து மனுக்களை பெற்றார்.

இப்பகுதியில் பொதுமக்கள் ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் செயல்படுத்தபடும், தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கபடும்,, தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் வழங்கபடும், மதுக்கடைகள் மூடப்படும்,நகை கடன் ரத்து செய்யப்படும், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்றார்கள் தற்போது 33% பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, இது எந்த வாக்குறுதியிலும் நிறைவேற்றவில்லை, இவை அனைத்தும் கோரிக்கை மனுக்களாகவும் பெற்றனர், மாறாக இந்த பெட்டி மூலம் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் பிரதமர் மோடி ஆட்சி அமைந்தவுடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்..

Tags:    

Similar News