அண்ணாமலையிடம் வாழ்த்து பெற்ற மாவட்ட நிர்வாகி
என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக நிர்வாகி பாஜக தலைவர் அண்ணாமலையிடம் வாழ்த்து பெற்றார்.
Update: 2024-02-01 15:54 GMT
தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட உதயமாம்பட்டை சேர்ந்த பிரபாகரனுக்கு பா.ஜ., மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் பதவி சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த என் மண், என் மக்கள் நிகழ்ச்சியில் மாநிலத்தலைவர் அண்ணாமலை பங்கேற்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
அதில், ரிஷிவந்தியத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் பிரபாகரன், மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பூங்கொத்து அளித்து வாழ்த்து பெற்றார்.