மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய பாஜக எம்எல்ஏ

சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-02-26 06:44 GMT

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய பாஜக எம்எல்ஏ

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டியை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
Tags:    

Similar News