பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - 16 பேர் கைது
குமாரபாளையத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.;
Update: 2024-06-24 03:36 GMT
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்த சம்பவத்தை கண்டித்து, நகர பா.ஜ.க. சார்பில், நகர தலைவர் சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக அரசு பதவி விலகக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. டி.எஸ்.பி. இமயவரம்பன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் அனுமதி இல்லாமல் நடந்ததால், இதில் பங்கேற்ற பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.