காளிங்கராயன் சிலைக்கு பாஜக வினர் மரியாதை
காளிங்கராயன் சிலைக்கு பா.ஜ.க வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-19 12:44 GMT
பாஜகவினர் மரியாதை
சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு பவானி முதல் கொடுமுடி வரை மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் பொருட்டு வாய்க்கால் அமைத்து தண்ணீர் கொடுத்த லிங்கையன் (எ) காளிங்கராயனை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் பொருட்டு தண்ணீர் திறந்த தை 5-ம் நாளான காளிங்கராயன் தின விழா கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து காளிங்கராயன் பாளையம், காளிங்கராயன் அணைக்கட்டில் உள்ள காளிங்கராயன் திருவுருவச் சிலைக்கு பா.ஜ.க சார்பில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி , மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் , மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்