பாஜக, காங்கிரசை அழிக்க நினைக்கிறது: ப.சிதம்பரம்

பாஜக அரசு காங்கிரசை அழிக்க நினைப்பதாக ப.சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார்.

Update: 2024-04-15 09:17 GMT

வாக்கு சேகரித்த ப.சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தியாகிகள் பூங்கா அருகில் இந்தியா கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகையுடன் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கைச்சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசும் போது தேவகோட்டையானது இந்துக்கள்,

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்று கூடி வாழ்கின்ற பூமி. அனைத்து சமூகங்களுடன், சமத்துவத்துடன் வாழ்கின்ற நகரம். தேவகோட்டை இது ஒரு அமைதியான நகரம். இந்த தேர்தல் என்பது மத்தியிலே யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிக்கக் கூடியது. மோடி தலைமையிலான பாஜக அரசு பத்தாண்டுகளாக இந்தியாவை ஆட்சி புரிந்தது. இந்த 10 ஆண்டு என்பது குறுகிய காலம் அல்ல, உலக நாடுகளிலே ஒபாமா உள்பட யாராக இருந்தாலும் கூட 5 ஆண்டுகள் தான் ஆட்சி புரிந்துள்ளனர். பத்தாண்டுகளில் இவர்கள் நாட்டிற்கு என்ன செய்தார்கள். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா? இல்லையா? என்பதுதான் கேள்விக்குறி.

தகுதி உள்ளவர்கள் எதனை விட்டுச் சென்றார்களோ அதை வைத்து தான் அவர்களை மதிப்பிட முடியும். அது போன்று மோடி அரசு இரண்டு விஷயங்களை தான் விட்டுச் சென்றுள்ளனர். ஒன்று விலைவாசி உயர்வு, மற்றொன்று வேலை வாய்ப்பின்மை, இன்று அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதிக உச்சத்தில் உள்ளது. கேஸ் விலை காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது 400 ரூபாயாக இருந்தது. இன்று ஆயிரம் ரூபாய்க்கு மேலாக உள்ளது. ஏன் இவர்களால் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை. எதற்காக இந்த அரசு இருக்க வேண்டும். பத்தாண்டுகளில் உங்களின் முகத்திரை கிழிந்து விட்டது.

நீங்கள் நாற்காலியை காலி செய்யுங்கள். வேறொரு கட்சி ஆட்சிக்கு வரட்டும். அடுத்த தலைமுறை வரட்டும். அது புத்திசாலியான தலைமுறை. பாஜகவை ஒழிக்க வேண்டும் என கூறவில்லை, காங்கிரசை அழிக்க வேண்டும் என்று பாஜகதான் சொல்கிறது பா.ஜ.க அரசியல். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு 3 ஆண்டுகளில் முத்தான பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக காலை உணவு திட்டம் என்ற உணவு திட்டத்தை செயல்படுத்தி பள்ளி குழந்தைகளின் வாழ்வில் ஒளியை ஏற்படுத்தி உள்ளனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்படுத்துவோம் என பேசினார்

Tags:    

Similar News