பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காததால் சாலை மறியல்

கந்தர்வகோட்டை அருகே பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-23 16:55 GMT

சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சிவந்தான்பட்டி கிராமத்தில் மூன்று சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள பிடாரி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த திருவிழாவின் போது பட்டியலின மக்களை வழிபாடு செய்ய மாற்று சமூகத்தினர் அனுமதிக்க வில்லை என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கந்தர்வகோட்டை பட்டுக்கோட்டை சாலையில் மரக்கட்டைகளை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய போது காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தி கலைந்து போக கூறியும் அவர்கள் கலைந்து போகாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சுழல் நிலவியது.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி அதிகாரிகள் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தில்,

ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அதிகாரிகளின் வருகைக்காக சாலை ஓரத்தில் நின்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சுழல் நிலவு வருகிறது.

Tags:    

Similar News