இரத்ததான முகாம்

நாமக்கல் கூட்டுறவு துறை சார்பில் இரத்த தான முகாம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

Update: 2024-05-14 15:19 GMT
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அவசர கால பயன்பாட்டுக்கு இரத்தம் வழங்கப்பட்டு வருகிறது. தற்சமயம் இரத்தம் குறைவான எண்ணிக்கையில் இருப்பு இருந்து வருவது மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு சென்றது. உடனடியாக ரெட் கிராஸ் சங்கத்தின் ஒருங்கிணைப்புடன் அனைத்து அரசு துறை அலுவலர்களும் விருப்பமுள்ளவர்கள் தன்னார்வத்துடன் இரத்ததானம் வழங்கிட நடவடிக்கை எடுத்தார்.இதன் தொடர்ச்சியாக நாமக்கல் கூட்டுறவு துறை சார்பில் இரத்த தான முகாம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.முகாமினை கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் கா.பா.அருளரசு தலைமையில் துவக்கி வைத்து ரத்த தானம் வழங்கினார்.100 க்கும் மேற்பட்ட கூட்டுறவுத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டு தன்னார்வத்துடன் 87 யூனிட் ரத்தம் வழங்கினார்கள். ஏழை எளிய மக்களின் உயிர்காக்கும் உன்னத பணிகளை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் சி. ஆர்.இராஜேஸ் கண்ணன் , இரத்த வங்கி மருத்துவர் அன்பு மலர்,கூட்டுறவுத் துறை துணை பதிவாளர்கள் ராமசுப்பு ,நாகராஜன், ஜேசுதாஸ் மற்றும் ரெட் கிராஸ் நிர்வாகிகள் மாதையன், ஆண்டனி ஜெனித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News