பல் மருத்துவக் கல்லூரியில் ரத்ததான முகாம்

நாமக்கல் பல் மருத்துவக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-14 05:25 GMT
ரத்த தான முகாம் 
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கிக்கு இன்று இரத்த தான முகாம் கே எஸ் ஆர் பல் மருத்துவக் கல்லூரியில்நடத்தப் பட்டது. இம்முகாமை ரெட் கிராஸ் மாவட்ட செயலர் இராஜேஸ் கண்ணன் மற்றும் கல்லூரி முதல்வர் மருத்துவர் சரத் அசோகன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். KSR பல் மருத்துவ கல்லூரி யூத் ரெட் கிராஸ் மாணவ மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம்வழங்கினார்கள். இரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இம் முகாமில் இரத்த வங்கி மருத்துவ அலுவலர் ஈஸ்வர் ஆய்வக நுட்புநர் சுரேஷ் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News