பேராவூரணி அருகே ரத்ததான முகாம்
பேராவூரணி அருகே டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை, செருவாவிடுதி தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆவணம் டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஆவணம் டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ரத்த தான முகாமை நடத்தினர். முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.அருள் தலைமை வகித்தார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எம்.மதிவாணன், பார்மசி கல்லூரி முதல்வர் என்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பி.சீனிவாசன் தலைமையில் மருத்துவக் குழுவினர், 25 மாணவர்களிடம் இருந்து ரத்தத்தை தானமாகப் பெற்றனர். ரத்த தான முகாமில் மருத்துவ அலுவலர் பொன்.அறிவானந்தம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.தவமணி, எம்.பூவலிங்கம், டி.புண்ணியநாதன், பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் ஆர்.கணேசன், பார்மசி கல்லூரி துணை முதல்வர் பி.பரிமளாதேவி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கே.சரவணன், எஸ்.ராஜ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் எம்.பெரமமூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர் வி.பிரசாத், ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.