ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி ரத்ததான முகாம்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பில் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி ரத்ததான முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-29 14:29 GMT

ரத்ததான முகாம்

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 71 பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், மாநிலமருத்துவரணி இணைச் செயலருமான லட்சுமணன் ஏற்பாட்டின் பேரில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் அருகிலுள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலரும், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வுமான புகழேந்தி தொடங்கி வைத்தார். விழுப்புரம் எம்.எல்.ஏ.வும், மாநில மருத்துவரணி இணைச் செயலருமான லட்சுமணன் முகாமில் முதல் நபராக ரத்ததானம் வழங்கினார். தொடர்ந்து கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் ரத்தங்களை தானமாக வழங்கினார்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் வித்யா, கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நிஷாந்த் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்று, தானமாக வழங்கப்பட்ட ரத்தங்களை பெற்றுச் சென்றனர்.

இந்த நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், மாவட்ட திமுக பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, விழுப்புரம் நகரச் செயலர் சக்கரை, ஒன்றியச் செயலர்கள் பிரபாகரன், தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றியக்குழுத் தலைவர் சச்சிதாநந்தம், நகர்மன்ற உறுப்பினர்கள் மணவாளன், புருஷோத்தமன் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News