தமுமுக நிர்வாகிகளுக்கு குருதி கொடையாளர் விருது

குற்றாலத்தில் தமுமுக நிர்வாகிகளுக்கு குருதி கொடையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2024-04-08 08:19 GMT

விருது

தென்காசியில் தமிழ்நாடு ரோட்டரி கிளப் தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் ஜேசிஐ இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் தென்காசி இரத்ததான கூட்டமைப்பு இணைந்து நடத்திய குருதி கொடையாளர்கள் 2024 விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் செங்கை ஆரிப் முயற்சியில் தென்காசி நகர தமுமுக நிர்வாகிகளுக்கு குருதி கொடையாளர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News