வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பாமக வேட்பாளர்
பழைய தர்மபுரி பகுதியில் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி
Update: 2024-06-21 06:22 GMT
தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக போட்டியிட்ட முனைவர் சௌமியா அன்புமணி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் இன்று காலை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைய தர்மபுரி முத்துகவுண்டன் கொட்டாய் ,சவுலூர், கொளத்தூர் குண்டலபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் தர்மபுரி தொகுதியில் என்னை நம்பி வாக்களித்த பொதுமக்களுக்கு நான் தாயாக இருந்து சேவை புரிவேன் நான் ஏற்கனவே தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் விவசாயம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து போராடுவேன் நான் தோல்வியுற்றாலும் எனக்காக வாக்களித்த லட்சக்கணக்கான வாக்காள பொதுமக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தர்மபுரி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடுவேன் எனவும் உறுதி அளித்து பேசினார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவத்திற்கு கடும் கன்னடத்தை தெரிவித்த அவர் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து சாராய வியாபாரிகள் மீது இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமெனவும் தமிழகத்தில் ஆறாக ஓடும் கள்ளச்சாராயத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது தர்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல.வேலுசாமி மாவட்ட செயலாளர் அரசாங்கம், அமமுக ஒன்றிய செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.