புளியங்குடியில் இறந்த நிலையில் இளம் பெண் உடல் மீட்பு

Update: 2023-12-19 05:27 GMT

உடல் மீட்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி சிந்தாமணிக்கு செல்லும் பாதையில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தில் இன்று அதிகாலை அவர் வயல் வேலைக்காக வந்தபோது இளம்பெண் பிணம் ஒன்று கிடப்பதை கண்டு உடனடியாக புளியங்குடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News