எல்.கே.பி நகர் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் விழா

எல்.கே.பி நகர் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-04-06 16:43 GMT

நூலகத்திற்கு புத்தகம் வழங்கல் 

எல் கே பி நகர் பள்ளியில் உள்ள டாக்டர் சாய் லட்சுமி நினைவு நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை சித்ரா முன்னிலை வகித்தார். ஆசிரியை அருவகம் வரவேற்றார்.

விழாவில் அண்ணாமலை இன்ஜினியரிங் கல்லூரியில் 1982 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சார்பாக ரவி, ஆலோன், அசோக், கணேஷ் ஆகியோர் ரூபாய் 34,000 மதிப்பிலான புத்தகங்களை பள்ளி நூலகத்திற்கு வழங்கினார்கள்.

மாணவி ஜெயஸ்ரீ 'வாசிப்பு எனக்கு மகிழ்ச்சி தரும்' என்ற தலைப்பில் பேசினார். முகமது இதிரீஸ், ஷர்மிளா பானு, ஹிபாபேகம், தமீகா, பவித்ரா, அதனியா, ஹாஜிரா பானு, முத்துலட்சுமி, பைரோஸ் பானு, ஆதிப்பிரியா, நிஸ்மா ஆகிய மாணவ, மாணவிகள் தாங்கள் வாசித்த புத்தகங்களை திறனாய்வு செய்து பேசினார்கள். திறனாய்வு செய்த மாணவ மாணவிகளுக்கு மெடல்கள், பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.

நல்லோர் குழு சார்பாக அறிவழகன், ஜெகதீஷ் ஆகியோர் மாணவிகளுக்கு வயர் கூடை பின்ன தேவையான வயர்கள், தையலுக்கு தேவையான ஊசிகள், துணிகள் மற்றும் இதர பொருட்களை வழங்கினர். நிகழ்வில் ஏகம் பவுண்டேஷன் ராஜேஷ், அன்பரசன், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். தையல் ஆசிரியை ராணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News