காட்பாடியில் புத்தகக் கண்காட்சி - துணை மேயர் துவக்கி வைப்பு

காட்பாடியில் வாசகர் வட்டம் சார்பில் நடக்கும் புத்தகக் கண்காட்சியை துணை மேயர் சுனில் குமார் துவக்கி வைத்தார்.

Update: 2023-12-31 07:53 GMT

புத்தக கண்காட்சி 

வேலூர் மாவட்டம் காட்பாடியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பாரதி புத்தகாலயம், மின் சிறகுகள் கலைக்குழு மற்றும் காட்பாடி வாசகர் வட்டம் இணைந்து புத்தக கண்காட்சியை நடத்தினர். இந்த புத்தக கண்காட்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் நேதாஜி தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க காட்பாடி செயலாளர் நவீன் வரவேற்று பேசினார். ஜெகன் சங்கர் துர்கா சுடரொளியன் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சியின் துணை மேயர் எம் சுனில் குமார் புத்தக கண்காட்சியினை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேந்திரன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் ஜனார்த்தனன். ஆகியோர் வாழ்த்தி பேசினார். பொருளாளர் எம் சின்னதுரை நன்றி கூறினார்.

இந்த புத்தகக் கண்காட்சி காட்பாடி காந்திநகர் எல்ஐசி அலுவலகம் எதிரே இதற்கான கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது இந்த கண்காட்சி அரங்கில் 500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன பாரதி புத்தகாலயத்தின் முன்னாள் பொறுப்பாளர் ஆர் சாவித்திரி அம்மாள் நினைவாக இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.

Tags:    

Similar News