பூத் கமிட்டி கூட்டம்

வால்பாறை எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி தலைமையில் ஆனைமலையில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.

Update: 2024-01-03 14:30 GMT

வால்பாறை எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி தலைமையில் ஆனைமலையில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.

பொள்ளாச்சி:இந்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அதிமுக சார்பில் அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இன்று ஆனைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஆனைமலை நகரச் செயலாளர் ராஜேந்திரன்,ஆனைமலை நகரத் தலைவர் மனோகரன் வார்டு கிளைச் செயலாளர் ராஜமாணிக்கம்,பிரகதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News