கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

திருவண்ணாமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-22 06:53 GMT
சிறுவன் பலி 

திருவண்ணாமலை அடுத்த குலால்பாடி பகுதியை சேர்ந்த வடிவேலு என்பவரது மகன் கருவன் (வயது 5). சிறுவன் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News