டூவீலர் விபத்தில் சிறுவன் படுகாயம் - போலிசார் வழக்கு !

சிறுவனும், இளைஞனும் ஓட்டிய டூவீலர் மோதி விபத்து. சிறுவன் படுகாயம். சிந்தாமணிப்பட்டி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.;

Update: 2024-04-06 05:33 GMT

வழக்கு பதிவு

சிறுவனும், இளைஞனும் ஓட்டிய டூவீலர் மோதி விபத்து. சிறுவன் படுகாயம். சிந்தாமணிப்பட்டி காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வீரணம்பட்டி அருகே உள்ள களத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஜெயராம் வயது 15. ஜெயராம் மார்ச் 30ஆம் தேதி இரவு 7:30 மணி அளவில், உப்பிடமங்கலத்தில் இருந்து சிந்தாமணி பட்டி சாலையில், தனது டிவிஎஸ் எக்ஸெல் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இவரது டூவீலர் வீரணம்பாளையம் பகுதியில் உள்ள எஸ் கே எம் பேக்கரி அருகே சென்றபோது, அதே சாலையில் கடவூர் தாலுகா, வரவணை அருகே சுண்டுகுழிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் விக்னேஷ் வயது 23 என்பவர் ஓட்டி வந்த பஜாஜ் பல்சர், டூ வீலரை வேகமாக ஓட்டி ஜெயராம் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில், வாகனத்துடன் கீழே விழுந்த ஜெயராமுக்கு வலது கால் தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு, தனயார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயராமின் தந்தை மாரியப்பன் வயது 55 என்பவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும் அஜாகவும் போட்டி விபத்து ஏற்படுத்திய விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சிந்தாமணி பட்டி காவல்துறையினர்.

Tags:    

Similar News