கோலாகலமாக தொடங்கிய பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்!

ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

Update: 2024-04-16 16:11 GMT

 பிரம்மோற்சவ விழா 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது .இந்நிகழ்ச்சியில் அறங்காவலர்கள், கோயில் நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள், விழா உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News