தங்கையை காதலித்த இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணன் கைது
Update: 2023-11-16 03:49 GMT
கொலை செய்யப்பட்ட முரளி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஜமான் கொள்ளை பகுதியை சேர்ந்த முரளி என்பவர் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் அண்ணன் சந்தோஷ் என்பவர் முரளியிடம் தங்கையிடம் பேசுவதை விடும் படி பலமுறை கண்டித்துள்ளார். இதனை கண்டுக்கொள்ளாமல் முரளி சிறுமியிடம் தொடர்ந்து பேசி வந்த நிலையில், கடந்த ஜீன் மாதம் முரளியும், சிறுமியும் திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.பின்னர் சிறுமியின் தந்தை அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் முரளியை போக்ஸோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வந்துள்ளனர். சிறுமியை அவரின் பெற்றோருடன் காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.இதனை தொடர்ந்து மீண்டும் முரளி சிறுமிடம் பேசி வந்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், நேற்று நள்ளிரவு தும்பேரி பகுதியில் இருந்த முரளியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல்துறையினர் முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தோஷை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.