ரூ.35.35 லட்சம் மதிப்பில் கட்டிடங்கள் - துணை சபாநாயகர் திறப்பு

Update: 2023-12-12 07:18 GMT

கட்டிட திறப்பு விழா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள கமலப் புத்தூர் ஊராட்சியில் ரூ.14.29 லட்சம் மதிப்பில் புதிய பயனியர் நிழற்குடை மற்றும் சமையலறை கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் பா.ராமஜெயம், வி.பி.அண்ணாமலை, ஆகியோர் முன்னிலை வகிக்க, ஊராட்சி மன்ற தலைவர் கமல் அனைவரையும் வரவேற்றார்.

சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி புதிய கட்டிடங்களை திறந்து வைத்து , சிறப்புரையாற்றுகையில் இந்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது .அதுவும் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளும் அதிக அளவு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது .ஏனென்றால் இந்த திராவிட மாடல் ஆட்சியில் தான் ஊராட்சிகள் அனைத்தும் வளர்ச்சியான பாதையில் செல்கிறது. அதேபோல் மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதற்காக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல நல்ல திட்டங்களை வழங்கி வருவதால் மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் அரசு பள்ளியில் சேர்வதற்கு முந்தி வருகின்றனர்.

ஏனென்றால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதற்கு எண்ணும் ,எழுத்தும், கற்றல் ,கற்பித்தல், இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண் திட்டம், என பல திட்டங்களை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதால், மாணவர்கள் ஆர்வத்துடன் அரசு பள்ளியில் படிப்பதற்கு முன் வருகின்றனர். அதேபோல் கிராமங்கள் அனைத்தும் வளர்ச்சியான பாதையில் செல்வதற்கு புதிய சாலை வசதி, புதிய அங்கன்வாடி மையம், புதிய பள்ளி கட்டிடம், புதிய சமையலறை கட்டிடம், பகுதிநேர ரேஷன் கடை, புதிய பல்நோக்கு கட்டிடம், மேம்பாலங்கள், கல் வெட்டுகள், பஞ்சாயத்து அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், என அனைத்து வளர்ச்சி பணிகளும் நடைபெற்று வருகிறது இது அனைத்தும் திராவிட மாடல் ஆட்சியில் மட்டும் தான் அதிக அளவு நடை பெற்று வருகிறது என்றார்.

அதனைத் தொடர்ந்து கமலப்புத்தூர் ஊராட்சியில் புதிய பயணியர் நிழற்குடை ரூ.6 லட்சம் மதிப்பிலும் அதே ஊராட்சியில் புதிய சமையலறை கூடம் ரூ.8.29 லட்சத்தில் கட்டிடத்தையும். ஊசாம்பாடி ஊராட்சியில் ரூ.13.75 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையகட்டிடத்தையும், இனாம் காரியந்தல் ஊராட்சியில் ரூ.7.49 லட்சம் மதிப்பில் பகுதி நேர ரேஷன் கடை கட்டிடத்தையும் மொத்தம் ரூ.35.35 லட்சம் மதிப்பில் ஆகிய 4 புதிய கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்து பேசுகையில், மக்கள் முழுமையாக பயனடைய வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பல நலத்திட்ட உதவிகளும் பல வளர்ச்சிப் பணிகளும் அதிக அளவு நடைபெற்று வருகிறது.

இது அனைத்தும் திராவிட மாடல் ஆட்சியில் மட்டும்தான் அதிக அளவு நடைபெற்று வருகிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பாலு, ஆணையாளர் பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஒன்றிய உதவி பொறியாளர் அருணா, ஒன்றிய துணைச் செயலாளர் குபேரன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வினோத், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News