மாட்டு வண்டி எல்லை பந்தயம்
கீழவலையம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது
Update: 2024-06-23 05:12 GMT
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே உள்ள கீழவலையம்பட்டி மகாலிங்கேஸ்வரா் கோயில் திருவிழாவையொட்டி, மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டிக்கு கீழவலையம்பட்டியிலிருந்து மறவமங்கலம் வரையில் 8 கி.மீ. தொலைவும், சிறிய மாட்டு வண்டிக்கு 6 கி.மீ. தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டன. பெரியமாடு பிரிவில் 8 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. இரு பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கும், வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் விழாக் குழுவினரால் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.