மாட்டு வண்டி எல்கை பந்தயம்
திருமயம் அருகே வி.லெட்சுமிபுரத்தில் நடந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் 40 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.;
Update: 2024-02-19 08:15 GMT
மாட்டு வண்டி எல்கை பந்தயம்
திருமயம் அருகே வி.லெட்சுமிபுரத்தில் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடந்தது. கிராமதலைவர் கருப்பையா தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித்தலை வர்கள் வைரவன்,ரங் கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி சரவணன் வரவேற்றார். பந்தயத்தை விராச்சிலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அடைக்கலங் காத்தார் தொடங்கி வைத்தார். 11 பெரிய மாட்டு வண்டி, 29 சிறிய மாட்டு வண்டிகள் பங்கேற்றன. முதல் 3 இடங்களை பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசை மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் வழங்கினார். பந்தய கமிட்டி செயலாளர் கணேசன் நன்றி கூறினார். பந்தயத்தை வி.லெட்சுமிபு ரம் திருமயம் சாலையின் இருபுறமும் நின்று நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். பனையப்பட்டி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.