கடையாத்துப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், கடையாத்துப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயத்தில் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-22 07:52 GMT

மாட்டு வண்டி பந்தயம்

அறந்தாங்கி அருகே கடையாத்துப் பட்டி யில் அரியநாயகி அம்மன் கோயில் 36வது ஆண்டு மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு வல்லம்பர் சமுதாயத்தின் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, நடுமாடு,கரிச்சான் மாடு என்று 3 பிரிவாக நடத்தப்பட்ட போட்டியில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகள் பங்கேற்றன. முதல் 3 இடங்களை பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.
Tags:    

Similar News