கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்
காளையார்கோவில் அருகே மகாலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள கீழவலையம்பட்டி மகாலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. இன்று காலை 10 மணயளவில் தொடங்கிய மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாட்டுப்பிரிவுக்கு கீழவலையம்பட்டியிலிருந்து மறவமங்கலம் வரையிலான 8 கிமீ தொலைவும், சிறிய மாட்டு வண்டிக்கு 6 கிமீ தொலைவும் பந்தய எல்லையார நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில், பெரியமாடு பிரிவில் 8 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும் பங்கேற்றனர்.
பெரிய மாடு மற்றும் சிறிய மாடு பிரிவுகளில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் விழாக்குழுவினரால் ரொக்கப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. விறு விறுப்பாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தை காளையார்கோவில், காஞ்சிப்பட்டி, மரக்காத்தூர், முடிக்கரை, மறவமங்கலம், காயாஓடை, ஆண்டுரணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சாலையில் இரு புறங்களிலும் நின்று கண்டு களித்தனர்.