வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு - மர்ம நபர்களை தேடும் போலீசார்
சங்கராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-06 05:28 GMT
திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களுக்கு போலீசார் வலைவிச்சு
சங்கராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் பிரதீப், 34; சிவில் இன்ஜினியர். இவர் தற்போது வடசேமபாளையம் வி.ஐ.பி., நகரில் புதிதாக வீடு கட்டி, குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2ம் தேதி சேமபாளையத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தேவ பாண்டலம் வீட்டிற்குச் சென்றார். நேற்று மாலை சேமபாளையம் வீட்டிற்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 90 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகை, வெள்ளி குத்து விளக்கு உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.