பைக்குகள் எரிப்பு: அண்ணன், தம்பி உட்பட 3பேர் கைது!
தூத்துக்குடி அருகே அருகே முன் விரோதத்தில் 3 பைக்குகளை எரித்த அண்ணன்,தம்பி உள்பட 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
Update: 2024-04-12 04:32 GMT
கைது
தூத்துக்குடி அருகே அருகே முன் விரோதத்தில் 3 பைக்குகளை எரித்த அண்ணன்,தம்பி உள்பட 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் சுண்டன் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் நிஷாந்த் (20). இவர் தனது நண்பரான பழையகாயல் காமராஜர் சாலையை சேர்ந்த ஆரோக்கிய ஜான்சன் மகன் ஜெனித் (23), மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3பேரும் தனித்தனி பைக்குகளில் தெற்கு கல்மேடு ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3பேர் அவர்களை வழிமறித்து தாக்கி பைக்குகளை பெட்ரோல் ஊற்றி எரித்தார்களாம். இதில் 3 பைகளும் எரிந்து சாம்பலாயின. முன் விரோதம் காரணமாக பைக் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிஷாந்த் அளித்த புகாரின் பேரில், தருவைக்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) ராஜகுமாரி வழக்குப் பதிவு செய்து தெற்கு கல்மேடு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் மகன் முத்துராஜ் (34), அவரது தம்பி பால்பாண்டி (32), மற்றும் அவரது நண்பரான தங்கராஜ் மகன் கருப்பசாமி (20) ஆகிய 3பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.