புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்
மலைவாழ் மக்கள் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து சேவை.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 04:47 GMT
பேருந்து சேவை துவக்கம்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட போத காட்டில் மலைவாழ் மக்கள் அதிக அளவு வாழ்ந்து வருகின்றன, இப்பகுதி கிராம மக்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாமல் கடும் அவதி உற்று வந்தன இந்த நிலையில் இன்று பாப்பிரெட்டிப்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் போத காட்டில் இருந்து தர்மபுரிக்கு புதிய வழித்தட பேருந்து இயக்கப்பட்டது, இந்த புதிய பேருந்து நிலைய வழித்தடத்தினை அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஆரத்தி எடுத்தனர். பொதுமக்களை பேருந்தில் ஏற்றி ஒன்றிய செயலாளர் சரவணன் கொடியசைத்து பயணத்தை துவக்கி வைத்தார், ஊரட்சிமன்ற தலைவர் பூங்கொடி மாணிக்கம். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி. ஒன்றிய துணை செயலாளர் ஜாகிர்ஷெரீப் . கிளைச் செயலாளர் மாதப்பன் விருத்தாசலம் பூங்கொடி வெங்கடேசன் மாதேஷ் சக்திவேல் செந்தில் மாதையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்