கிராமத்திற்குள் வந்த பேருந்து - மேள தாளத்துடன் மக்கள் வரவேற்பு

பேரத்தூர் கிராமத்தில் முதல் முறையாக மக்கள் பயன்பாட்டிற்காக விடப்பட்ட அரசு பேருந்து சேவையை கிராம மக்கள் மேள வாத்தியங்களோடு நடனமாடி உற்சாகமாக வரவேற்றனர்.

Update: 2024-03-05 08:32 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரத்தூர் கிராமத்தில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேரூந்து சேவை இல்லாமலேயே இருந்துள்ளது.அதிமுக ஆட்சி காலத்தில் கிராம மக்கள் பல முறை கோரிக்கை அளித்தும் அதற்கான நடவடிக்கை மேற்க்கொள்ளாமல் அதிமுக அரசுகிடப்பில் போட்டுள்ளது. அதன்பின் திமுக ஆட்சியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பொறுபேற்றபின் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் தங்கள் கிராமத்திற்கு பேருந்து சேவையை இயக்கிட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் சா.மு.நாசர், மற்றும் ஆ.கிருஷ்ணசாமி ஆகிய இருவரிடத்திலும் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து ஆவடி பனிமனையில் இருந்து பேரூந்து சேவையானது திருவள்ளூரில் இருந்து பேரத்தூர் ஊராட்சிக்குட்டப்பட்ட நந்தக்கோயில் திப்பை வரை தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான மகளிர் இலவச பேருந்தினை பேரத்தூர் கிராமத்தில் பூவிருந்தவல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி மக்கள் பயன்பாட்டிற்கு 505 என்ற வழித்தட எண் கொண்ட பேருந்தினை கொடியசைத்து துவைக்கி வைத்தார். இந்த பேருந்தினை கிராம பொதுமக்கள் பேருந்தை அலங்கரித்தும், மேளவாத்தியங்களோடு நடனமாடியும், உற்சாகத்தோடு வரவேற்றனர்.இந்நிகழ்வில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய செயலாளர் ஜெசீலன், ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி தரணி, உட்பட திரளாக கிராம மக்களும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News