கன்றுவீச்சு நோய் தடுப்பூசி முகாம்

ஆத்தூர் அருகே வளையம்மாதோவி வால்கரடு பகுதியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடைபெற்ற கன்றுவீச்சு தடுப்பூசி முகாமில் 30க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்து கொண்டனர்.;

Update: 2024-02-28 02:12 GMT

கன்றுவீச்சு தடுப்பூசி முகாம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வளையம்மாதேவி ஊராட்சிக்குட்பட்ட வால்கரடு, மணிகண்டபுரம் புத்து மாரியம்மன் கோவில் பகுதியில் கன்றுவீச்சு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மஞ்சினி கால்நடை மருந்தகம் மருத்துவர் கோகிலா ராணி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது மூன்று மாதம் முதல் 8 மாதம் வரை உள்ள கிடேரிக்கன்றுகளுக்கு கன்று வீச்சு நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கன்று வீச்சு நோய்னால் ஏற்படும் பாதிப்பு குறித்து கால்நடை மருத்துவர் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் கால்நடை உதவி மருத்துவர் அப்பகுதி உள்ள விவசாயிகள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News