தன்னார்வ சட்டப்பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தர்மபுரி மாவட்டத்தில் தன்னார்வ சட்டப்பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-05-13 02:48 GMT
தர்மபுரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,தர்மபுரி மாவட்ட சட்ட பணிகள் ஆணையத்திற்கு, சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை பாமர மக்களுக்கு எடுத்துரைப் பதற்காக, தன்னார்வ சட்டப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் 50 தன்னார்வ சட் டப்பணியாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 500 வீதம் அலுவலர் உத்தரவு பணி செய்யும் நாட்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படும். எனவே, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வ சட்டப்பணியாளர்களுக்கு ஆசிரியர்கள் (ஓய்வு ஆசிரியர்கள் உட் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், சமூகப் பணியில் முதுநிலைக்கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் - ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர் உடல் நல நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் (அவர்கள் வழக்கறிஞராகப் பதிவு செய்யும் வரை), அரசியல் சார்பற்ற அரசு சாரா சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் சங்கப் பிரமுகர்கள், மகளிர் குழுக்கள் மற்றும் வறியோரை உள்ளடக்கிய சுய உதவிக் குழுக்கள் ஆகி யவற்றின் உறுப்பினர்கள், நீண்ட கால தண்டனை பெற்று சிறையிலுள்ள படித்த சிறைவாசிகள் ஆகி யோரிடமிருந்து தன்னார்வ சட்டப்பணியாளர்கள் பணிபுரிய விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின் றன. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை, மாவட்ட சட்ட பணிகள் ஆணையம், நீதி மன்ற வளாகம், தடங்கம், தர்மபுரி-636705 என்ற முகவரிக்கு 20ம் தேதிக்குள் வந்து சேருமாறு நேரிலோ அல்லது தபால் மூலமா கவோ அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பணி நிரந்தரம் செய்ய உரிமை கோர முடியாது. சம்பளம், தொகுப் பூதியம் மற்றும் தினக்கூலி எதுவும் கிடையாது. வேலை செய்த நாட்களுக்கு மட்டும் மதிப்பூதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் சேவை மனப்பான்மை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சட்ட பணிகள் ஆணையத்தினை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.