ஸ்ரீவைகுண்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி ஒரு நாள் தங்கி முகாமிட்டு கள ஆய்வு மேற்கொள்கிறார்.

Update: 2024-02-21 06:47 GMT

மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி

தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இன்று  தங்கி முகாமிட்டு ஸ்ரீவைகுண்டம் வட்டத்திலுள்ள அனைத்துறை அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.

 மதியம் 2.30 முதல் 4.30 வரை அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி முன்பகலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட கள பயணங்கள் / அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டு அறிவார். அதன் பின் மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 04.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை பெற்றுக் கொள்வார். அதன் பின் மீண்டும் நகர்ப்புறம் / கிராம ஊராட்சிகளின் பகுதிகளுக்குச் சென்று பல்வேறு அரசு துறைகளின் சேவை வழங்குதல் / திட்ட செயல்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்ய உள்ளார்.

 இரவு அவ்வட்டத்திலேயே மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களும் தங்கி 22.02.2024 அன்று அதிகாலை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் அடிப்படை வசதிகளான குடிநீர் / சுகாதாரம் / தூய்மை / போக்குவரத்து / முதல்வர் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். மக்கள் இருப்பிடம் தேடி சேவை அளிக்கும் வகையிலும் களஆய்வின் போது கண்டறியப்பட்ட அவ்வட்ட மக்களின் தேவைகள் குறித்த முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைத்திடும் வகையிலும் உருவாக்கம் செய்யப்பட்டுள்ள " உங்களைத் தேடி உங்கள் ஊரில் " திட்ட முகாமின் போது பொது மக்களும் தங்கள் வாழ்விட முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துக்களையும், கோரிக்கை மனுக்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கிடலாம் என மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தெரிவித்து உள்ளார்கள்.

Tags:    

Similar News